பாஜக வேட்பாளர் பட்டியல்...கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை போட்டி...

Mar 21, 2024 - 18:55
பாஜக வேட்பாளர் பட்டியல்...கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை போட்டி...

3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக தலைமை, அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி தென்சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜனும், கோவையில் அண்ணாமலையும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 

மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளிலும், 4 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தாமரை சின்னத்திலும் போட்டியிடப் போவதாக அண்ணாமலை அறிவித்த நிலையில், தற்போது 9 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் 4-ம் கட்ட பட்டியலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow