உதயநிதி பிறந்தநாள் - பெரியார், அண்ணாவை மறந்த திமுகவினர்
பேரறிஞர் அண்ணா, பெரியார் சிலை முன்பு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் சிலைகளுக்கு மாலை அணிவிக்காமல் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர்
தஞ்சாவூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பெரியார், அண்ணாவின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தாமல் சென்ற சம்பவம் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் விழா இன்று திமுக கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதைப்போல் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு மண்டலத்தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடினர்.
இந்நிலையில் திமுக கட்சி சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் இன்று பேரறிஞர் அண்ணா, பெரியார் சிலை முன்பு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் சிலைகளுக்கு மாலை அணிவிக்காமல் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர்.இதனால் திமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?