பேராவூரணி: மீனவ மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்.எல்.ஏ 

மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருவதற்கும், பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்கியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Jan 15, 2024 - 16:33
Jan 15, 2024 - 22:05
பேராவூரணி: மீனவ மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய  எம்.எல்.ஏ 

பேராவூரணி அருகே மீனவ மக்களுடன் இணைந்து எம்.எல்.ஏ சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில், நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகு மீனவர்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை காலை 12 மணிக்கு நடைபெற்றது.இதில், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் முன்னிலை வகித்தார். நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள், மீனவப் பெண்கள், கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.இதில் கலந்து கொண்ட பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருவதற்கும், பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்கியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow