வீடு வீடாகச்சென்று பொங்கல் பண்டிகைக்கு சில்வர் தாம்பாளத்துடன் சீர்வரிசை - அசத்திய ஊராட்சி மன்றத்தலைவர்
பிறந்த வீட்டு வரிசையாக சில்வர் தாம்பாளம், பச்சரிசி, வெள்ளம், நெய், முந்திரி, திராட்சை , இரண்டு கரும்புகள், வாழைப்பழம் உள்ளிட்டவைகளுடன் சீர்வரிசையை ஊராட்சி மன்றத்தலைவர் வழங்கினார்.
திருவிடைமருதூர் அருகே கோட்டூர் கிராமத்தில் வீடு வீடாகச்சென்று பொங்கல் பண்டிகைக்கு சில்வர் தாம்பாளத்துடன் அரிசி, வெள்ளம், வாழைப்பழம் அடங்கிய தொகுப்பை சீர்வரிசையாக வழங்கி ஊராட்சி மன்றத்தலைவர் அசத்தினார்.
தமிழர்களின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுவது பொங்கல் பெருவிழா. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தரிசியில் பொங்கலிட்டு சூரியனுக்கு சமர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கே பிறந்த வீட்டு வரிசையாக அரிசி,வெள்ளம்,பழங்களுடன் சீர்வரிசை கொடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சொந்த ஏற்பாட்டில் ஆடுதுறை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து கிராமத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பிறந்த வீட்டு வரிசையாக சில்வர் தாம்பாளம், பச்சரிசி, வெள்ளம், நெய், முந்திரி, திராட்சை , இரண்டு கரும்புகள், வாழைப்பழம் உள்ளிட்டவைகளுடன் சீர்வரிசையை ஊராட்சி மன்றத்தலைவர் உமா சிங்காரவேலு ஒவ்வொறு வீட்டிற்கும் நேரில் சென்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ஆண்டுக்கு இரண்டு முறை ஊராட்சி மன்றம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் குளத்தில் வளர்க்கப்படும் மீன் இறைச்சிகளை அசைவ பிரியர்களுக்கும் சத்தான செவ்வாழை பழத்தை சைவ பிரியர்களுக்கும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து மூன்றாண்டுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் ஊராட்சி மன்றத்தலைவரின் இத்தகைய செயலுக்கு பலர் பாராட்டி வருகின்றனர்.
What's Your Reaction?