நாமக்கல்: கோயிலை இடித்து, சாமி சிலைகளை தூக்கிபோட்டு வீட்டுமனை

எனக்கு அதுக்கு சம்மந்தமில்லீங்க. நிலத்த வாங்ககுவன கேளுங்க. நான் எதுவும் செய்யல

Jan 15, 2024 - 16:27
Jan 15, 2024 - 22:05
நாமக்கல்: கோயிலை இடித்து, சாமி சிலைகளை தூக்கிபோட்டு வீட்டுமனை

கோயில் போன்ற அமைப்புடன் இருந்த இடத்தில் சாமி சிலைகள் உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்துவிட்டு வீட்டுமனை போடப்பட்டுள்ள சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் டூ பரமத்தி வேலூர் போகும் வழியில் உள்ளது செங்கப்பள்ளி ஊராட்சி. குறிப்பிட்ட ஊராட்சியின்  பஸ் நிலைய பகுதியில் இரண்டு சர்வே எண்கள் கொண்ட நிலம்  6 ½ ஏக்கரை கபிலர்மலையை சார்ந்த ஒருவர் வாங்கி  வீட்டுமனைக்கு சீர் செய்திருக்கிறார். அப்படி பொக்லைன் விட்டு சீர் செய்யும்போது கோயில் போன்ற அமைப்பும் சிவன், விநாயகர், கோயில் போன்ற அமைப்பும் பூமிக்கடியில் இருந்திருக்கிறது.  

சிதிலமடைந்த கோயில்  அமைப்பையும், சிலைகளையும் இரவோடு இரவோக அகற்ற முடிவெடுத்த நியல் எஸ்டேட் அதிபர் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். இதை அறிந்த ஊர் பொதுமக்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள். 

தொல்லியல் துறை ஆய்வு செய்யமால் நிலத்தை சமன்படுத்தகூடாது உத்தரவு போட்டார் மோகனூர் தாசில்தார் ஜானகி. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் சட்டத்திற்கு புறம்பாக 50 டிப்பர்களை  வைத்து மணல் கொட்டி நிலத்தை சமபடுத்தி வருகிறார்கள். எந்த அதிகாரியும் ஏன்? என்று கேட்கவில்லை. நடவடிக்கை வேண்டும் என மீண்டும் கடந்த வாரம் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்கள் ஊரார்.

புகார் கொடுத்த காமராஜிடம் பேசினோம். ‘ கடந்த  அக்டோபர் மாசந்தான்  சிவன், முருகன், அனுமன் போன்ற பழமை வாய்ந்த சிலைகள் கிடைச்சது. இது எல்லா டிவியிலும் வந்திடுச்சி. தாசில்தார் வந்து ஆய்வு செஞ்சிட்டு தொல்லியல் ஆய்வு நடக்குமுன்னு சொன்னாங்க. ஆனா எதுவுமே நடக்கல.  சிலை கிடைச்ச இடத்தை ஆய்வு செஞ்சப்ப பழங்கால கோயில் இருந்ததற்கான சான்றும் கிடைச்சது. அப்படி இருந்து அரசாங்க தரப்பு நடவடிக்கை எடுக்கல. செங்கப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் நந்தகுமார் திமுக கட்சியில பதவியில இருக்காரு. அவரு லட்சகணக்கில பணத்த வாங்கிட்டு  இந்த வேலையை செய்ய அனுமதிக்கிறாரு. அவர் செஞ்சாலும் தொலியல் துறை ஆய்வு வேனுமுன்னு சொன்ன  அரசாங்கம் கம்முனு விட்டதற்கான மர்மந்தான் என்ன? அந்த இடத்த பூஜை பண்ணிட்டு போனாரு சிவனாடியார் ஒருத்தரு. சிலையை  தூக்கிபோட்டதும் மறுநாளே இறந்துட்டாரு. கிராம மக்கள் கெட்டது நட்ந்துடுமுன்னு அச்சபடறாங்க. ஒரு பழங்கால வரலாறையே அழிச்சி பிளாட் போட ராப்பாகல  டிப்பர் லாரியை வைத்து இடத்தை அழிக்கிறாங்க. மாவட்ட கலெக்டர் எதுவுமே கண்டுக்கல. தொல்லியல் துறைக்கு புகார் அனுப்பியும் எதுவும் நடக்கல. லஞ்சம் வாங்கிட்டு ஒரு கோயிலையே அதிகாரிகளும் அழிச்சிட்டாங்க.’ என்றார்.

கிராம மக்களை விசாரித்தால் ‘ ரியல் எஸ்டேட் சம்மந்தபட்ட விசயம் இருந்தாலும், சிலை இருந்த இடத்தை மண் கொட்டி அவசரமாக நிரப்புவது ஏனோ?’ என்று கேட்கிறார்கள். 

செங்கப்பள்ளை பஞ்சாயத்து தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது ‘ எனக்கு அதுக்கு சம்மந்தமில்லீங்க. நிலத்த வாங்ககுவன கேளுங்க. நான் எதுவும் செய்யல.’ என்றார்.

மோகனூர் தாசில்தார் அலுவலகத்திலோ ‘ இந்த பிரச்சினையில தாசில்தார் டிரான்ஸ்பரே  ஆயிட்டாரு. பணம் பல கோடி லஞ்சமா பாயுது. கலெக்டரே அந்த இடத்துக்கு ஆய்வுக்கு போகமாட்டாரு. அதான் இப்ப நிலைமை.’ என்கிறார்கள். 
மாவட்ட நிர்வாகம் மேல் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

-கே.பழனிவேல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow