காவல்துறை டிஜிபி பெண்களுடனான சில்மிஷ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரல் கே. ராமச்சந்திர ராவ் பெண்களுடன் சில்மிஷம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், ”ஒரு அரசு ஊழியருக்குப் பொருந்தாத ஆபாசமான முறையில் டிஜிபி நடந்து கொண்டார், அரசாங்கத்திற்கு அவமானத்தையும் ஏற்படுத்தினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் அச்சமடைந்த ராமசந்திரராவ், பெங்களூருவில் உள்ள மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வரை சந்தித்து விளக்கம் கொடுக்க சென்றார். ஆனால் அவரை சந்திக்க அனுமதி வழங்கவில்லை.
வீடியோக்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திர ராவ், ”வீடியோக்களை கண்டு நானும் அதிர்ச்சியடைந்தேன். இது அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை மற்றும் பொய். அந்த வீடியோ அனைத்தும் தவறானது. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எப்படி, எப்போது நடந்தது, யார் இதைச் செய்தார்கள் என்பது பற்றியும் நான் யோசித்து வருகிறேன்.
இந்தக் காலத்தில் எதுவும் AI மூலம் செய்யலாம். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என கூறினார். இவை பழைய வீடியோக்களா? என்ற கேள்விக்கு, “பழையது என்றால், எட்டு வருடங்களுக்கு முன்பாக நான் பெலாகவியில் பணியாற்றியபோது” என கூறிவிட்டு சென்றார்.
முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டபோது, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம். காவல்துறை அதிகாரி எவ்வளவு மூத்தவராக இருந்தாலும் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசு இது குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்வோம். மூத்த அதிகாரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும்படி மாநில காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
What's Your Reaction?

