இன்ஸ்டா ஐடி சொல்லு? கத்தி காட்டி பள்ளி மாணவிகளை மிரட்டிய சிறுவர்கள் கைது!

மாணவிகளிடம் கத்தியை காட்டி இன்ஸ்டா முகவரி (Instagram ID) கேட்டு மிரட்டியதாக 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.

Mar 28, 2025 - 11:59
இன்ஸ்டா ஐடி சொல்லு? கத்தி காட்டி பள்ளி மாணவிகளை மிரட்டிய சிறுவர்கள் கைது!
2 boys arrested for threatening with knife

2கே கிட்ஸ்களின் வயதுக்கு மீறிய செயல்பாடுகள் குறித்து வரும் செய்திகள் நாளுக்கு நாள் அச்சத்தை தருவதாக உள்ளது. 90-ஸ் கிட்ஸ்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் 2கே- கிட்ஸ்கள் மிக இளம் வயதில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் தான் பள்ளி மாணவிகளை கத்தி காட்டி சிறுவர்கள் மிரட்டியுள்ள சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது.

இவர்கள் ஏன் கத்தி வைத்து மிரட்டினார்கள் என கேள்விப் பட்டால் இன்னும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. சென்னை திருவிக நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் படித்து வரும் பள்ளி மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டி இன்ஸ்டாகிராம் முகவரியை (Instagram ID) கேட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் என இருவரை திருவிக நகர் போலீசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கத்தி காட்டி பணம், நகை பறித்த சம்பவங்களை தாண்டி இன்ஸ்டா முகவரி கேட்கும் அளவிற்கு சமூகம் வந்துள்ளது வேதனைக்குரியது என சமூக நல ஆர்வலர்கள் இச்சம்பவத்திற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow