வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
சென்னையில் மூதாட்டியை முகத்தில் தாக்கி கொன்று விடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜாம்பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 80 வயது மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில் காலை உணவு எடுத்து வந்து தனது தாயாருக்கு கொடுப்பது வழக்கம். அதுபோல வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு தாழ்பாள் போடாமல் இருந்துள்ளது.
வீட்டினுள் நுழைந்து பார்க்கையில், தனது தாய் ஆடைகள் களைந்து, காயங்களோடு மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக மூதாட்டியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். உடலில் பல இடங்களில் நகக்கீறல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் மூதாட்டியை பரிசோதனை செய்த போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனடியாக ஜாம்பஜார் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததும், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பணம் கேட்டு பாலியல் வன்கொடுமை:
மேலும் மூதாட்டிக்கு மயக்கம் தெளிந்த நிலையில் அவரிடம் போலீசார் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் தளத்தில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டின் கதவையும் ஜன்னலையும் யாரோ உடைப்பது போல இருந்ததாகவும், யார் எனக்கேட்டு கதவை திறந்த போது உள்ளே நுழைந்த வெள்ளை டீ சர்ட் அணிந்து இருந்த நபர் தனது தாடையில் குத்தி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், மேலும் தன்னை கீழே தள்ளி தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், இல்லையெனக் கூறியபோது தன்னை மீண்டும் தாக்கிவிட்டு, நடந்ததை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும், தன்னால் எழுந்து நடக்க முடியாத நிலையில் மயங்கி விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மூதாட்டி கூறிய அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது திருவள்ளூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (40) என்பதும், அதீத மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. வேலைக்காக சில நாட்களாக ஜாம்பஜார் பகுதியில் தங்கியுள்ளதும் , வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து நாகராஜிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. நாகராஜ் வேறு யாரிடமாவது இது போன்று அத்துமீறியுள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Read more: இன்ஸ்டா ஐடி சொல்லு? கத்தி காட்டி பள்ளி மாணவிகளை மிரட்டிய சிறுவர்கள் கைது!
What's Your Reaction?






