கள்ளத்தொடர்பால் நடந்த களேபரம்... போலீஸ் கண்முன்னே மூதாட்டி மீது தாக்குதல்... பேரனுக்காக பாட்டியை தாக்கிய உறவினர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் கள்ளத்தொடர்பால் வீட்டை விட்டு வெளியேறிய இளைஞரின் பாட்டியை, பெண்ணின் கணவரும் உறவினர்களும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்பழகன் மனைவி லூர்து மேரி தம்பதி. இவர்கள் இருவரும் இறந்த நிலையில், இவர்களது மகனான ஆரோன் (20) அவரது பாட்டியான சமன்ஸ் மேரியுடன் வசித்து வருகிறார்.
ஆரோன் கடன் கொடுத்து வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறார். அதன்படி, கிருஷ்ணாபுரம் அடுத்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நித்யா என்பவருக்கும் கடன் கொடுத்ததாக தெரிகிறது. கடனை திரும்ப வாங்குவதற்காக ஆரோன் அடிக்கடி வந்து போக இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த மாதம் நித்யா, ஆரோனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அதையறிந்த உறவினர்கள் இரவு முழுவதும் ஆரோனை கட்டி வைத்து அடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து குருசிலப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர்.
சில நாட்களுக்கு பின்னர் ஆரோனும் நித்யாவும் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இதுகுறித்து நித்யாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் குருசிலாப்பட்டு உதவி காவல் ஆய்வாளர் பன்னீர் மற்றும் அவருடன் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள், லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஆரோன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள், ஆரோனின் பாட்டியான சமஸ்மேரி மற்றும் லீமாரோஸ் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை விசாரணைக்காக வந்த உதவி காவல் ஆய்வாளர் பன்னீர் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காயமடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் முன்னிலையிலேயே தாங்கள் தாக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?