பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டல்... தங்க நகை, ரூ.50,000 பறிப்பு - இன்ஸ்டா காதலனை தட்டித் தூக்கிய போலீஸ்
சொன்னால், தாய் மற்றும் தம்பியை கொலை செய்து விடுவதாக இளைஞர் மிரட்டியுள்ளார்.
சென்னை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி சிறுமியிடம் காதலிப்பது போல் நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், பணம், நகையை பறித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சென்னை அருகே திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அரியலூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த அருண்குமார்(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அருண்குமார் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த ஒரு வருடமாக சிறுமியிடம் 1 சவரன் தங்க நகை மற்றும் சிறுமியின் அம்மாவுக்கு தெரியாமல் அவரது ஏடிஎம் கார்டு மூலம் சிறுக சிறுக ரூ. 50,000 வரை பணத்தை பெற்றுள்ளார்.
நடந்தவற்றை வெளியில் சொன்னால், தாய் மற்றும் தம்பியை கொலை செய்து விடுவதாக அருண் மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமி நடந்ததை தாயாரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அருண் குமாரை கைது செய்தனர்.
What's Your Reaction?