உயிரை காக்க ஓடிய பீகார் தொழிலாளி.. பைக்கில் வந்த மூவர் வெறிச்செயல்... திகிலடித்த திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் கணியம்பூண்டி அருகே நடந்து சென்ற பீகார் மாநில தொழிலாளரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

May 15, 2024 - 17:09
உயிரை காக்க ஓடிய பீகார் தொழிலாளி.. பைக்கில் வந்த மூவர் வெறிச்செயல்... திகிலடித்த திருப்பூர்

கணியம்பூண்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார் (22) என்ற இளைஞர், பணி முடிந்து தனது அறைக்கு நடந்து சென்றுள்ளார். 

அப்போது அவரை பின் பைக்கில் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், வழிமறித்து அவரது கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். செல்போனை தர மறுத்ததால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மூவரும், ஆகாஷ் குமாரை கத்தியால் குத்திவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை எடுத்து சென்றுள்ளனர். 

காயமடைந்த ஆகாஷ் குமார், ரத்த வெள்ளத்தில், நண்பர்களை சந்தித்து நடந்ததை சொல்ல, நண்பர்கள் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனிடையே ஆகாஷ் குமார் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சக வடமாநில தொழிலாளர்கள், தனியார் நிறுவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow