அச்சுறுத்தும் நாய்கள்.. சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து கணவர் படுகாயம்.. உரிமையாளர் மீது மனைவி புகார்...

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே வளர்ப்பு நாய் ஒன்று, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரை கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 15, 2024 - 16:53
அச்சுறுத்தும் நாய்கள்.. சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து கணவர் படுகாயம்.. உரிமையாளர் மீது மனைவி புகார்...

மதுரவாயல் அருகேயுள்ள ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் (51). இவர் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, இவரது வீட்டின் அருகே லாவண்யா என்பவர் வளர்த்து வரும் நாய், ரமேஷ்குமாரை காலில் கடித்து குதறியது. 

இதில் காயமடைந்த ரமேஷ்குமார், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில், ரமேஷ்குமாரின் மனைவி, நாயின் உரிமையாளர் லாவண்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் நிலையத்திலும், சென்னை மாநகராட்சியிலும் புகார் அளித்திருக்கிறார். 

அதில், லாவண்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாயை அங்கிருந்து பிடித்துச் செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், நாயை அங்கிருந்து பிடித்துச் சென்றனர். 

சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் அரங்கேறியதன் எதிரொலியாக, நாய் வளர்ப்போருக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow