காவலர் தற்கொலை : காதல் தகராறா..? ஆன்லைன் விளையாட்டா..? - நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, காதலியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதாச்சலம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ். ஆவடி அருகே திருமுல்லை வாயலில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி, மணலி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ஆவடி காவல் ஆணையகரத்தில் பணிபுரியும் 25 வயதான பெண் காவலர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து வரும் மே மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெண் காவலர் தங்கியிருந்த திருமுல்லைவாயில் எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்புக்கு வந்த விக்னேஷ்க்கும், பெண் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண் காவலர் கோபித்துக் கொண்டு சொந்த ஊர் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த விக்னேஷ் அந்தக் காவலர் குடியிருப்பிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லையாவல் போலீசார், விக்னேஷின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், விக்னேஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.30,000 வரை இழந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆக ஒருவேளை இந்த விரக்தியால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?