கோடையில் குடிநீருக்காக விளைநிலங்களை முற்றுகையிட்ட வனவிலங்குகள்...
தேனி வனப்பகுதியில் கோடைகாலத்தில் வனவிலங்குகள் குடிப்பதற்காக நீர் நிரப்படும் தொட்டிகள் காலியாக உள்ளதால், விலைநிலங்களை நோக்கி வனவிலங்குகள் படையெடுப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
                                தேனி வனப்பகுதியில் கோடைகாலத்தில் வனவிலங்குகள் குடிப்பதற்காக நீர் நிரப்படும் தொட்டிகள் காலியாக உள்ளதால், விலைநிலங்களை நோக்கி வனவிலங்குகள் படையெடுப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை தேவதானப்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கடமான், சறுகுமான் ஆடு போன்ற பல வனவிலங்குகள் வாழ்கின்றன. வழக்கமாக அந்தப் பகுதிகளில் வனவிலங்குகள் குடிப்பதற்கு நீர் நிரப்பும் 2 அடி உயரமுள்ள தொட்டிகள் பல இடங்களில் இருக்கின்றன. குறிப்பாக கோடைகாலத்தில் வனத்துறையினர் அந்தத் தொட்டிகளில் நீர் நிரப்புவார்கள்.
நீர் நிரப்படும் தொட்டிகள் சரியாக பராமரிக்காமலும், நீர் நிரப்பப்படாமலும் இருப்பதால், வனவிலங்குகள் அந்தப் பகுதிகளில் இருக்கும் விலைநிலங்களில் இருக்கும் நீர்நிலைக்கு படையெடுத்து வருவது தொடர்கதையாகியுள்ளது. மா, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தடுக்க, தொட்டிகளில் நீர் நிரப்பி பராமரிக்க உரிய நடவடிக்க எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            