Premgi: “பிரேம்ஜி Wife இவங்கதான்..” கல்யாண பத்திரிகையில் GOAT அப்டேட்... வெங்கட் பிரபு வார்னிங்!
தனது தம்பி பிரேம்ஜியின் திருமணம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை வைரலாகி வருகிறது.
சென்னை: கங்கை அமரன் மகன், வெங்கட் பிரபுவின் தம்பி, காமெடி நடிகர் என பிரேம்ஜிக்கு பல அடையாளங்கள் உள்ளன. ஆனாலும், 90ஸ் கிட்ஸ்களின் ரோல் மாடலாகவும், குருவாகவும் அவர் கொண்டாடப்பட்டு வந்தார். அதற்கெல்லாம் ஒரே காரணம், பிரேம்ஜி இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்ததே ஆகும். இதோ அதோ என இத்தனை ஆண்டுகளாக மேரேஜ் என்றால் அதற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாமல் ஒத்தையாகவும் கெத்தாகவும் மாஸ் காட்டி வந்தார். அப்படிப்பட்ட பிரேம்ஜி தற்போது புதுமாப்பிள்ளையாக அவதாரம் எடுத்துள்ளது 90ஸ் கிட்ஸ்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பிரேம்ஜி திருமண அழைப்பிதழ்
கடந்த வாரம் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலானது. மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக அச்சடிக்கப்பட்டிருந்த அதில், ஜூன் 9ம் தேதி பிரேம்ஜிக்கும் இந்து என்பவருக்கும் திருமணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த திருமண நிகழ்ச்சி திருத்தணியில் உள்ள முருகன் சன்னதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த திருமண பத்திரிகையில் இளையராஜாவின் பெயர் இல்லை என்பதையும் ரசிகர்கள் குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர். அதேபோல், பிரேம்ஜியின் மனைவி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் எனவும் தகவல்கள் வெளியாகின.
பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?
இதனையடுத்து பிரேம்ஜியின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் ட்ரெண்டாகின. இந்நிலையில், தனது தம்பி பிரேம்ஜி திருமணம் பற்றி வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும் அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. ”பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?” ”சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா?” இதை எல்லாவற்றையும் விட ”பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்கு பதில். வரும் 9ம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.
பிரேம்ஜி மனைவி யார்?
அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும் நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்கிறேன். எங்களுடையை பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்! BTW The Goat அப்டேட் விரைவில்... இப்படிக்கு பாசத்துடன் வெங்கட் பிரபு என குறிப்பிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு வார்னிங்
இதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், யூடியூபர்கள் கேமராவுடன் திருத்தணி வந்துவிடக் கூடாது என வெங்கட் பிரபு சைலண்டாக வார்னிங் கொடுத்துள்ளாரோ என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?