Maharaja Release Date: மிஸ்ஸான தனுஷின் ராயன்... ரிலீஸுக்கு ரெடியான விஜய் சேதுபதியின் மகாராஜா!

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jun 5, 2024 - 11:56
Maharaja Release Date: மிஸ்ஸான தனுஷின் ராயன்... ரிலீஸுக்கு ரெடியான விஜய் சேதுபதியின் மகாராஜா!

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள மகாராஜா ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. ஹீரோ, வில்லன், கேமியோ என கிடைக்கும் கேரக்டர்களில் எல்லாம் வெரைட்டியாக நடிப்பதில் கில்லாடி விஜய் சேதுபதி. பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, மாமனிதன் படத்தில் ரசிகர்கள் கண்கலங்கும் படியும் நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ள விஜய் சேதுபதி, மகாராஜா மூவி ரிலீஸானதும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் சேதுதியின் மகாராஜா
குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் அறிமுகமான நித்திலன் சாமிநாதன், அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்தார். அதன்படி மகாராஜா என்ற டைட்டிலில் உருவான இது, விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியாகவுள்ளது. இதில், பாலிவுட் லீடிங் டைரக்டர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான மகாராஜா ட்ரெய்லர் படத்துக்கு தாறுமாறான ஹைப் கொடுத்துள்ளது. லக்ஷ்மியை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க செல்கிறார் விஜய் சேதுபதி. அதன்பின்னர் நடக்கும் செம்ம ரகளையான சம்பவங்கள் தான் மகாராஜா படத்தின் கதை எனத் தெரிகிறது. 

மகாராஜா ட்ரெய்லர்
இதில், ஆக்டிங், ஆக்ஷன் என வெரைட்டியாக மிரட்டியுள்ளார் விஜய் சேதுபதி. எனவே இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தனுஷின் ராயன் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதன் காரணமாக ராயன் படத்தில் இருந்து அடுத்தடுத்து இரண்டு பாடல்களையும் படக்குழு ரிலீஸ் செய்தது. தொடர்ச்சியாக ராயன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என சொல்லப்பட்டன. 

மகாராஜா ரிலீஸ் தேதி
ஆனால், கடைசி நேரத்தில் தனுஷின் ராயன் ஜூன் ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. இந்தப் படம் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜூலையில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து ராயனுக்குப் பதிலாக ஜூன் 14ம் தேதி ரிலீஸாகிறது மகாராஜா. ஜூன் இறுதியில் பிரபாஸின் கல்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே மகாராஜா படத்தை ரிலீஸ் செய்துவிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்தப் படம் மினிமம் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதால் வசூலில் லாபம் கொடுக்கும் எனவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஜாவை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள Train மூவியும் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow