குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Jan 17, 2024 - 15:59
குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்தார்.

கொச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த பிரதமர் மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து கொச்சியில் திறந்தவெளி வாகனத்தின் ஊர்வலமாக சென்ற மோடிக்கு சாலைகளின் இருபுறமும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத்தொடர்ந்து குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் மோடி வருகையையொட்டி கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி, நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow