காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை மாற்றுவது தொடர்பாக பரிசீலனை

செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற நிர்வாக பிரிவு பரிசீலித்து வருகிறது.

Jan 17, 2024 - 17:51
Jan 17, 2024 - 17:58
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை மாற்றுவது தொடர்பாக பரிசீலனை

செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை, காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்றங்களும், சார்பு நீதிமன்றங்களும் செங்கல்பட்டில் அமைந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், செங்கபட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்பு நீதிமன்றங்கள் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்படவில்லை எனக் கூறி, சின்ன காஞ்சியைச் சேர்ந்த எம்.எஸ்.குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்காடிகள், வழக்குகளுக்காக செங்கல்பட்டு செல்ல வேண்டியுள்ளதால், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்பு நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்றக் கோரி 2023 ஆகஸ்ட் மாதம் அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற நிர்வாக பிரிவு பரிசீலித்து வருவதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow