தஞ்சாவூர்: ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் பெட்ரோல் பரிசு

ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் திருவள்ளுவர் தினம் என்பதால் திருக்குறளை ஒன்று சொல்லி தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு சென்றனர்.

தஞ்சாவூர்: ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் பெட்ரோல் பரிசு

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பொங்கல் பரிசாக இலவசமாக பெட்ரோல் வழங்கி போலீசார் அசத்தினர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.

இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் இன்று திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 நபர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டன.

இதில் காவல் டிஎஸ்பி நீலகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டோக்கனை வழங்கினர்.

மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் திருவள்ளுவர் தினம் என்பதால் திருக்குறளை ஒன்று சொல்லி தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு சென்றனர்.காவல்துறையினரின் இந்த நூதன விழிப்புணர்வு பொதுமக்களால் பாராட்டப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow