போடப்பட்ட 40 நாட்களில் தார்ச்சாலை பெயர்ந்த அவலம்
தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிதம்பரம் அருகே 36 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட தரமற்ற தார் சாலை 40 நாட்களில் பெயர்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தில் மெயின் ரோடு இணைப்பு சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்தது.அதை தொடர்ந்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் அந்த கிராமத்திற்கு முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் மதிப்புபிடு ஒதுக்கப்பட்டு 850 மீட்டர் தொலைவில் தார்சாலை அமைக்கப்பட்டது.
அமைக்கப்பட்ட 40 நாட்களில் சாலை சிதலம் அடைந்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாலையை பெயர்ந்ததை எடுத்துக் காண்பித்தனர்.
பின்னர் அது மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதாகை ஒன்று வைக்கப்பட்டது.அதில் சம்பந்தமில்லாத பகுதியில் சாலை இருப்பது போன்று குறியீடு இருந்ததால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.புதிய தார்சாலை அமைத்து 40 நாட்களில் பெயர்ந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?