சொத்துக்காக பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பேரன்

மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Dec 22, 2023 - 15:01
Dec 22, 2023 - 19:11
சொத்துக்காக பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பேரன்

பொள்ளாச்சி அடுத்த சந்திராபுரம் பகுதியில் சொத்திற்காக பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்த சந்திரபுரம் பகுதியில் சேர்ந்தவர் நாகத்தாள் ( 50 ).இவர் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

நாகாத்தாளின் உறவினர்கள் சிலர் அடிக்கடி இவரை வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்த நிலையில், திடீரென நாகாத்தாள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்த பார்த்தபோது நாகாத்தாள் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் வேட்டைக்காரன் புதூர் பகுதி சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரிடம்  போலீசார் விசாரணை செய்ததில் தனது உறவினரான நாகத்தாள் பாட்டியிடம் நில பட்டாவை கேட்டதற்கு தர மறுத்ததால் ஆத்திரமடைந்து அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் அடித்துக்கொலை செய்ததாக விசாரணையில் மணிகண்டன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். 

இதனை அடுத்து மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நில பட்டாவிற்காக பாட்டியை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow