புதுச்சேரி முதல்வர் பதவிக்கு குறி : லாட்டரி மார்ட்டின் மகன் தொடங்கிய ''லட்சிய ஜனநாயக கட்சி"
புதுச்சேரி அரசியலை மையமாக வைத்து லாட்டரி மார்ட்டின் மகன் செயல்பட்டு வருகிறார். ''லட்சிய ஜனநாயக கட்சி " எனும் புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ். புதுச்சேரியில் ரங்கசாமி அரசு மீது கடும் விமர்சனத்தை வைப்பதுடன் பாஜக அல்லாத தொகுதிகளில் நலத்திட்டங்களை சார்லஸ் செயல்படுத்தி வருகிறார்.
மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்தார், பாஜகவில் இருந்து விலகி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கான நல உதவிகளை அவர் வழங்கி வருகிறார். இந்த அமைப்பையே டிசம்பரில் அரசியல் கட்சியாகவும் மாற்ற முடிவெடுத்திருக்கும் சார்லஸ் மார்ட்டின் முடிவெடுத்து இருந்தார்.
இந்த நிலையில், ஜெனிவாவின் ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள சார்லஸ் மார்ட்டின். அந்த கூட்டத்தில் தனது புதிய கட்சி பெயரை அறிவித்துஇருக்கிறார். ''லட்சிய ஜனநாயக கட்சி" என்ற அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாகவும், வருகின்ற டிசம்பர்-14 ம் தேதி புதுச்சேரியில் பிரம்மாண்ட அறிமுக விழா நடைபெற உள்ளது.எனவும் தெரிவித்து உள்ளார்.
சார்லஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள புதிய கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என தெரிகிறது. பாஜக உள்பட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சார்லஸ் மார்ட்டினின் புதிய கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது.
What's Your Reaction?

