பெரியவர்களை பெரியார்வாதிகள் அவமதிக்கின்றனர் - தமிழிசை பாய்ச்சல் !

சாதிக்குள் வைத்த சாதிக்காரர்களை கும்பிட வேண்டுமா என பெரியார்வாதிகள் கேள்வியெழுப்புவது தமிழ்நாட்டில் பெரியவர்களை அவமதிக்கும் செயல் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

May 12, 2024 - 10:31
May 12, 2024 - 10:49
பெரியவர்களை பெரியார்வாதிகள் அவமதிக்கின்றனர் - தமிழிசை பாய்ச்சல் !

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதை வழங்கிய பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திரை சேவை, சமுதாய சேவை ஆகியவற்றிக்கு அங்கீகாரம் வழங்கிய பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும். அரசியல் சாயம் இல்லாமல் நடுநிலையாக அன்போடு விஜயகாந்த் மரியாதை செலுத்தப்பட்டு உள்ளார். விஜயகாந்த் திரை மற்றும் பொது வாழ்வு என இரண்டிலும் மிகுந்த மரியாதையான சூழ்நிலை ஏற்படுத்தி வந்தார். விஜயகாந்த் காலத்தில் இருந்த திரையுலகம் இன்று உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சிறைக்குள் போனதால் நினைவாற்றல் போய் விட்டதா என தெரியவில்லை. அவரது கேள்விகளில் அர்த்தமே இல்லை. சென்னை, திருச்சி விமான நிலையங்க்ள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சாதிக்குள் வைத்த சாதிக்காரர்களை கும்பிட வேண்டுமா என பெரியார்வாதிகள் கேள்வியெழுப்புவது தமிழ்நாட்டில் பெரியவர்களை அவமதிக்கும் செயல் தமிழ்நாட்டில் குறைந்து வரும் ஆன்மீக அனுகுமுறையை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்."

"திமுக ஆட்சி 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் சொல்லாட்சி அல்ல செயலாட்சி என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் செயல் இல்லாத ஆட்சியாக நடத்தி வருகிறார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொலை செய்து 8 நாட்களாகியும் எந்த துப்பும் துலங்கவில்லை. ஆனால் சவுக்கு சங்கரை கைது செய்தது எப்படி? பெண்களை பற்றி  யார் பேசினாலும் தவறு. சட்டத்தை சட்ட ரீதியாக அனுகாமல் வன்முறையாக அணுகி உள்ளனர். நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணத்தை மறைப்பதாக தோன்றுகிறது. உயர் விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்." எனவும் அவர் தெரிவித்தார்.

"வேங்கைவயலில் என்ன பிரச்சனை என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. சமூகநீதியை பற்றிப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. திமுக ஆட்சி முற்றிலும் தோல்வி அடைந்த ஆட்சி. 2026ம் ஆண்டு தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். 10 ஆண்டுகளாக மோடி எதுவும் செய்யவில்லை எனக் கூறுபவர்கள் கண்னையும் காதையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள் என அர்த்தம்."

"சென்னை மாநகராட்சியில் மாடு முட்டினால் தான் மாட்டை பற்றியும் நாய் கடித்தல் தான் நாயை பற்றியும் கொசு கடித்தால் தான் கொசுவை பற்றியும் யோசனை வரும்.  கொரோனா காலத்தில் தடுப்பூசி உள்பட சாதனைகள் கொண்ட பட்டியலை தருகிறேன். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் என்ன செய்தீர்கள் என்ற பட்டியலை வெளியிடுங்கள். மோடி வெறுப்பு அரசியல் கொண்டு வரவே இல்லை. தென்னிந்தியர்கள் கருப்பாக இருப்பீர்கள் எனறு யார் சொன்னது?  இஸ்லாமியர்களை இதுபோல் நடத்துவோம் என யார் சொன்னது? மதம், சாதியை வைத்து அரசியல் செய்வது I.N.D.I.A.கூட்டணி. குறிப்பாக திமுக தான்." என அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow