எவரஸ்ட் மலையை 29 முறை ஏறிய நபர்... ரெக்கார்ட் பிரேக்கிங் சம்பவம்.. யார் இவர்?

எவரஸ்ட் சிகரத்தை 28-வது முறை ஏறி, நேபாளை சேர்ந்த காமி ரிதா ஷெர்பா தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

எவரஸ்ட் மலையை 29 முறை ஏறிய நபர்... ரெக்கார்ட் பிரேக்கிங் சம்பவம்.. யார் இவர்?

நேபாளத்தை சேர்ந்த மலையேறுபவரான காமி ரிதா ஷெர்பா, எவரஸ்ட் மனிதர் என்றும் அழைக்கப்படுகிறார். மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட இவர், டிரெக்கிங் துறையில் பல ஆண்டுகளாக இருப்பதோடு, ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மலையேற்றம் குறித்த பயிற்சிகளை அளிக்கும் பயிற்சியாளராகவும் உள்ளார். உலகின் உயரமான சிகரம் என்று அறியப்படும் எவரஸ்ட் சிகரத்தை இதுவரை 28 முறை ஏறி, இவர் சாதனை படைத்துள்ளார். 

54 வயதாகும் காமி ரிதா ஷெர்பா, 8,848.86 மீட்டர் சிகரத்தை ஒரு வாரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இத்தனை முறைதான் மலை ஏற வேண்டும் என்ற இலக்கு தனக்கில்லை என்று தெரிவித்துள்ள அவர், இன்னும் இரு முறை ஏறுவதற்காக திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். 

ஏப்ரல் மாத இறுதியில் 28 மலையேறுபவர்களுடன் காத்மண்டூவில் தனது மலையேற்றத்தை தொடங்கிய காமி ரிதா ஷெர்பா, இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்நிலையில், காமி ரிதா ஷெர்பாவின் இந்த சாதனையை பாராட்டியுள்ள மத்திய சுற்றுலாத்துறை, 29 முறை எவரஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய தனிநபர் என்ற கௌரவத்தை காமி ரிதா ஷெர்பாவுக்கு அளித்துள்ளது. 

இவரைப் போலவே 27 முறை எவரஸ்ட் சிகரத்தை ஏறி, பசங் தவா என்ற நேபாளியும் சாதனை படைத்திருக்கும் நிலையில், இந்தாண்டு அவர் மீண்டும் மலையேறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow