விஜய் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்: 20 நிமிட காட்சிகள் ரத்து,  ஜனநாயகன் பிப் 20-ல் ரிலீஸ்? 

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மறு ஆய்வு பணியை தணிக்கை வாரியம் மேற்கொண்டு வருவதால், பிப் 20-ம் தேதி திரைப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. 

விஜய் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்: 20 நிமிட காட்சிகள் ரத்து,  ஜனநாயகன் பிப் 20-ல் ரிலீஸ்? 
20 நிமிட காட்சிகள் ரத்து,  ஜனநாயகன் பிப் 20-ல் ரிலீஸ்? 

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தில் சில காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என சொல்லி; சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இதனால் அப்செட்டான படக்குழு உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை முதலில் விசாரித்த தனி நீதிபதி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கு சென்றபோது அங்கே சாதகமாக எதுவும் நடக்கவில்லை; மாறாக மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே செல்லுங்கள் என நீதிபதிகள் அனுப்பி வைத்தார்கள். மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, தணிக்கை வாரியம் பதிலளிக்க போதிய அவகாசம் வழங்கவில்லை; எனவே தனி நீதிபதி மறுபடியும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறியது நீதிமன்றம்.

சூழல் இப்படி இருக்க நீதிமன்றத்தை நம்பினால் இனிமேல் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த கேவிஎன் நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றது. இந்நிலையில், படத் தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைசிங் கமிட்டியிடம் அனுப்பியுள்ளது. சென்சார் போர்டு பரிந்துரைத்த மாற்றங்களை செய்ய படக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், படக்குழுவுடன் தொடர்பில் உள்ளவர்கள் தரப்பில் இதுபோன்ற தகவல்கள் மறுக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில், எல்லாம் திட்டமிட்டபடி சென்றால் வரும் 20ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஜனநாயகன்' ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow