RC 16: பூஜையுடன் தொடங்கிய RC 16… ராம் சரணுடன் இணைந்த ஏஆர் ரஹ்மான், ஜான்வி கபூர்!

ராம் சரண் நடிக்கும் RC 16 படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில், ஏஆர் ரஹ்மான், ஜான்வி கபூர், இயக்குநர் புச்சி பாபு சனா, சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

RC 16: பூஜையுடன் தொடங்கிய RC 16… ராம் சரணுடன் இணைந்த ஏஆர் ரஹ்மான், ஜான்வி கபூர்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் செம்ம பிஸியாகிவிட்டார் ராம் சரண். ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து இன்னொரு பிரம்மாண்டமான கூட்டணியில் இணைந்துள்ளார். அதன்படி ‘உப்பென்னா’ இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ஆர்சி 16 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் டோலிவுட்டில் என்ட்ரியாகிறார் ஏஆர் ரஹ்மான். கிராமத்துப் பின்னணியில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக ஜான்வி கபூர் கமிட்டாகியுள்ளார். ராம் சரண், ஜான்வி கபூர், ஏஆர் ரஹ்மான், புச்சி பாபு சனா என பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் ஆர்சி 16 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

இந்நிலையில், ஆர்சி 16 படத்தின் பூஜை விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், ராம் சரண், அவரது அப்பாவும் டோலிவுட் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி, ஏஆர் ரஹ்மான், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, கேம் சேஞ்சர் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்சி 16 பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றதையடுத்து விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.  

இதனிடையே ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் ஆபிஸராக நடித்து வருகிறார். மேலும், திஷா பதானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்க, தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow