ரேபரேலியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் !

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

May 3, 2024 - 14:34
ரேபரேலியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் !

ரேபரேலியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் !

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வரும் 20ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரசின் கோட்டையாக உள்ள ரேபரேலியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி வெற்றிபெற்று எம்.பியாக உள்ளார். அதேநேரத்தில் காங்கிரசின் மற்றொரு கோட்டையான அமேதியில் 2014 முதல் 2019ம் ஆண்டு வரை ராகுல்காந்தி வெற்றிபெற்ற நிலையில், 2019ல் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோற்றது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவானது. 

இதனால் தனது கோட்டை தொகுதிகளான அமேதி - ரேபரேலியில் வலுவாக கொடியை நாட்ட பல கட்ட ஆலோசனைகளை காங்கிரஸ் நடத்தி வந்தது. அதன்படி அமேதியில் ராகுலையும் ரேபரேலியில் பிரியங்கா காந்தியையும்  களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வரதாவுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கி 11 மணி நேர காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்திற்குப்பின் வேட்புமனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று, ரேபரேலியில் ராகுல்காந்தியும் அமேதியில் கிஷோர் லால் சர்மாவும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் தனி விமானத்தில் அமேதிக்கு ராகுல்காந்தி சென்றடைந்தார். தொடர்ந்து அங்கு தனது வேட்புமனுவையும் அவர் தாக்கல் செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow