உள்ளாடையில் பொட்டலம்.. சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்திய இளம்பெண்... சென்னையில் சிக்கியது எப்படி?

சார்ஜாவில் இருந்து தங்கத்தை கடத்தி இளம்பெண்ணிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.1.07 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 3, 2024 - 14:04
உள்ளாடையில் பொட்டலம்.. சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்திய இளம்பெண்... சென்னையில் சிக்கியது எப்படி?

சென்னை விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை  அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள்தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது சார்ஜாவில் இருந்து சென்னை வந்த இளம்பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த பெண்  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது  உள்ளாடைக்குள் 4 உருளை வடிவில் பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த உருளையில் ஒரு  கிலோ 690 கிராம் எடையுள்ள தங்க பேஸ்ட் இருந்தது தெரிய வந்தது. 

அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதை எதற்காக கடத்தி வந்தார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 7 லட்சம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow