காஞ்சிபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்

3000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Jan 8, 2024 - 14:30
காஞ்சிபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்

காஞ்சிபுரத்தில் மாமல்லன் நகர் செல்லும் சுரங்கப்பாதையில் தேங்கி நிங்கிய மழைநீரால் அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி இன்று ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையமானது தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மித மற்றும் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக காஞ்சிபுரத்தில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மித மற்றும் கன மழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழைநீரானது தேங்கி நின்று வருகிறது.அந்த வகையிலேயே காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலைய சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீரானது தேக்கம் அடைந்து வருகிறது. இதனால் அவ்வழியாக கடந்து செல்லக்கூடிய மாமல்லன் நகர் அசோக் நகர், மாருதி நகர், காமாட்சி நகர் 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி சிரமத்திற்கு இடையே அவ்வழியை கடந்து செல்லக்கூடிய நிலையானது ஏற்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் அப்பகுதியில் மழைநீரானது மேலும் தேங்கமடைந்து அவ்வழியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுமோ என அந்த பகுதி மக்களும், அவ்வழியை பயன்படுத்த கூடிய பொதுமக்களும் அச்சமடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீரை வெளியேற்றி உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow