தஞ்சாவூரில் காவல்துறை மோப்ப நாய் உயிரிழப்பு- 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

இறந்த மோப்பநாய் சச்சின் உடல் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் உள்ள மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டது.

Jan 8, 2024 - 14:31
தஞ்சாவூரில் காவல்துறை மோப்ப நாய் உயிரிழப்பு- 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

தஞ்சாவூரில் காவல்துறை மோப்ப நாய் உயிரிழந்ததை தொடர்ந்து 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

போலீசுக்கு பெரும் துணையாக உள்ளது துப்பறியும் நாய் படை பிரிவு. இப்படி பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு உற்ற துணையாக மோப்ப நாய்கள் உள்ளன.

 தஞ்சை மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டறிதலில் நன்கு பயிற்சி பெற்ற சச்சின் என்ற மோப்பநாய் துப்பறிவு பணியில் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மோப்ப நாய்க்கு ஓய்வு அளிக்கப்பட்டது.அதன் பின்னர் மோப்பநாய் பிரிவில் சக நாய்களுடன் வளர்ந்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு இந்த மோப்பநாய் இறந்தது.

இறந்த மோப்பநாய் சச்சின் உடல் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் உள்ள மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஷ் ராவத் நேரில் வந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மோப்ப நாய் சச்சின் உடல் அடக்கத்தின்போது 12 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow