திருத்துறைப்பூண்டி அருகே லாரி விபத்தில் ஒருவர் பலி

வேளூர் பாலத்தில் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

Jan 8, 2024 - 15:04
Jan 8, 2024 - 20:11
திருத்துறைப்பூண்டி அருகே லாரி விபத்தில் ஒருவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே சாலையோரம் வேலை செய்து கொண்டிருந்தவர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியில் வீடு கட்டும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் (45) என்பவர் கட்டுமான பணிக்கு சாலை ஓரம் சிமெண்ட் கலவை கலந்து கொண்டிருந்தபோது, திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி செந்தில் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
லாரி அவர் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பித்து செல்ல வேகமாக லாரியை ஓட்டி சென்ற லாரி ஓட்டுநரை பொதுமக்கள் மற்றும் போலீசார் விரட்டி  சென்றனர். அப்போது  வேளூர் பாலத்தில் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விபத்து குறித்து ஆலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்த நபர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow