173-வது திரைப்படம் ரஜினி டெய்லர்  வேடத்தில் நடிக்கிறார்: டான் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார் 

ரஜினி நடிக்கும் 173-வது திரைப்படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இந்த படத்தில் டெய்லர் வேடத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. 

173-வது திரைப்படம் ரஜினி டெய்லர்  வேடத்தில் நடிக்கிறார்: டான் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார் 
Rajinikanth to play Taylor in 173rd film

ரஜினியின் 173 ஆவது படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 6ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அப்போது இந்த படத்தை சுந்தர் சி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்த படத்தை சுந்தர் சி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. அவரும் கமலின் அலுவலகத்திற்கு வந்து ரஜினி, கமலிடம் இருந்து வாழ்த்துகளை பெற்றார். ஏற்கெனவே ரஜினி நடித்த அருணாச்சலம், கமல் நடித்த அன்பே சிவம் உள்ளிட்ட படங்களை சுந்தர் சி இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவின. ஆனால் உண்மையில் அவரது கதை ரஜினிக்கு பிடிக்க காரணத்தால் தான் விலகியதாக தெரிகிறது. இந்த நிலையில், ரஜினியின் 173 ஆவது படத்தின் இயக்குநர் யார் என்பது எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தை இயக்கி சிபி சக்ரவரத்தி, ரஜினியின் புதிய படத்தை இயக்கு உள்ளார். 

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெய்லர் வேடத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சிறிய கதாபாத்திரல் கமல்ஹாசனும் நடிக்க உள்ளதாக தெரிகிறது. ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய பட போஸ்டரில் கத்திரிகோல், ஊசி, நூல், பட்டன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது ரஜினி நடிக்கும் டெய்லர் கதாபாத்திரத்தை குறிக்கும் வகையில் உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow