புத்தாண்டில் சரக்கு விற்பனை எவ்வளவு தெரியுமா? 

கேரளா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தில்  2.07 சரக்கு பாட்டில்கள் விற்று புது ரெக்கார்டு படைத்துள்ளது. 

புத்தாண்டில் சரக்கு விற்பனை எவ்வளவு தெரியுமா? 
2.07 சரக்கு பாட்டில்கள் விற்று புது ரெக்கார்டு

கேரளா மாநிலத்தில் பண்டிகை தினங்களில் மதுவிற்பனை களைகட்டுவது வழக்கம். இந்தாண்டும்  கேரளாவில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஓணம் பண்டிகையின் போது 10 நாட்களில் ரூ.826.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி அதிகமாகும். அந்த வரிசையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனையும் செய்து புதிய ரெக்கார்டு படைத்துள்ளது. 

புத்தாண்டுக்கு முதல் நாளான 31-ந்தேதி மட்டும் கேரளாவில் ரூ.125.64 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டில் ரூ.108.71 கோடிக்கு விற்பனையாகி இருந்தது. தற்போது அதைவிட 16.93 கோடிக்கு அதிக மது விற்பனையாகி உள்ளது. 

கடந்த வார விற்பனை நிலையத்தில் மட்டும் ரூ.1.17 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தை பாலாரி வட்டம் (ரூ.95.09 லட்சம்) பெற்றுள்ளது. தொடுபுழா கஞ்சிக்குழி விற்பனை நிலையம் ரூ.4.61 லட்சம் மதுபானங்கள் விற்று விற்பனையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

புத்தாண்டுக்கு முதல் நாளில் 2.07 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் பெட்டிகள் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 1.84 லட்சம் பெட்டிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow