தீவிரவாத தாக்குதலில் இந்தியர் பலி.... இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்....
இஸ்ரேலின் வடக்கு எல்லையான மார்கலைட் என்னும் இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் சிக்கியவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். லெபனானில் இருந்து ராக்கெட் ஏவுகணை மூலம் ஹிஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது. மார்க்லைட் என்னும் கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குண்டு விழுந்ததில், கேரளமாநிலத்தை சேர்ந்த, பட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்தார். கேரளாவை சேர்ந்த ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக வடக்கு, தெற்கு எல்லைப் பகுதியில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டு அதிகாரிகளுடன் இந்திய மக்களின் பாதுகாப்பு பற்றி பேசி வருவதாகவும் தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய தூதரகம் அந்நாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு கருதி, தொலைப்பேசியில் தொடர்புகொள்ள +972-35226748 என்ற எண்ணும், [email protected] என்ற மெயில் ஐடியும் பகிர்ந்துள்ளது.
What's Your Reaction?