கடனை செலுத்தினால் படத்தை ரிலீஸ் செய்யலாம்: வா வாத்தியர் பட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் புது உத்தரவு

வா வாத்தியார் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடனை செலுத்தினால் படத்தை ரிலீஸ் செய்யலாம்: வா வாத்தியர் பட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் புது உத்தரவு
வா வாத்தியர் பட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் புது உத்தரவு

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம்   ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை  வட்டியுடன் சேர்த்து  21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், அர்ஜுன்லால் சொத்துக்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   பணத்தை திரும்ப செலுத்தும் வரை “வா வாத்தியார்”படத்தை  வெளியிடகூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.இந்த நிலையில் வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் தரப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான டிடி-யை, பட தயாரிப்பு  நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தியது.

 இதைடுத்த மீதி தொகையையும் செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என, நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர். தற்கிடையில், மூன்று கோடி கடன் தொகையை திருபித்தராததால் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தனேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow