பில்கேட்ஸ் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த ரூ.71,100 கோடி 

மைக்ரோசாஃப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கியுள்ளார். 

பில்கேட்ஸ் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த ரூ.71,100 கோடி 
Bill Gates paid Rs. 71,100 crore as alimony to his wife

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும்  இருவரும் பரஸ்பர விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அந்த தம்பதி இணைந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். 

எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில்கேட்ஸ், மெலிண்டா தம்பதி அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தனர். பில்கேட்ஸ் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இணைந்து நடத்தி வரும் பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷன், உலக அளவில் மிகவும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை தர உதவும் திட்டங்களுக்கும் தடுப்பூசி திட்டங்களுக்கும் நிதியுதவி  செய்து வருகிறது. 

இந்த நிலையில், 2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி 1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க பில்கேட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார். முதற்கட்டமாக ஏற்கனவே 41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய இருந்தார்.  இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கியுள்ளார். 

தமக்கு கிடைத்த ஜீவனாம்சத் தொகையின் பெரும்பகுதியை பிவொட்டல் பிலாந்தொபீஸ் அறக்கட்டளைக்கு வழங்கிய மெலிண்டா. பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு தமது அறக்கட்டளை பாடுபட போவதாகவும் மெலிண்டா அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow