சென்னையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.1.82 கோடி பறிமுதல்…

Flying Squad in Chennai

Apr 5, 2024 - 09:44
சென்னையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.1.82 கோடி பறிமுதல்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீஸார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை அபிராமபுரம் 3-வது கிராஸ் தெரு அருகே தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் கட்டுக்கட்டாக ரூ.1.82 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து வாகனத்தில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி, ஷேக் கலாம்,  சிவக்குமார்  என்பது தெரிய வந்தது.

இவர்கள் 3 பேரும் அம்பத்தூரில் சிஎம்எஸ் என்ற தனியார் நிறுவன ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருவது தெரியவந்தது. இருப்பினும் ஊழியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் பணத்தை திருவல்லிக்கேணியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கச் சென்றனர்.  

இந்நிலையில் கருவூல அதிகாரிகள் பணம் அதிகமாக இருப்பதால் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், பறிமுதல் செய்த பணத்தை வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட ஊழியர்களிடம்  வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow