முதல்வர் விழாவில் ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் போட்ட திமுக எம்எல்ஏ மகன்
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் வருகையின்போது திமுக எம்எல்ஏ மகன் கண்டன கோஷம் எழுப்பியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கண்டன குரல் எழுப்பிய எம்எல்ஏ மகனை போலீசார் வாயை மூடி வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், டிசம்பர் 7-ம் தேதி சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு, திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். அந்த சமயத்தில், அங்கிருந்த இளைஞர் திடீரென முதல்வர் ஸ்டாலின் முன்பாக சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பினர்.
இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞரை வாயை மூடி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உடனே, போலீசார் இளைஞரின் வாயை பொத்தி காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் அழைத்து சென்றனர்.
தொடர்ந்து இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் மகன் அக்சய் மார்க்கண்டேயன் என்பதும், இவர் டெல்லியில் சட்டக் கல்லூரியில் பயின்று வருவதும் தெரியவந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிட்டிங் திமுக எம்எல்ஏ மகன் ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் போட்ட சம்பவம் அறிவாலயத்தை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
What's Your Reaction?

