ஆவுடையப்பன் அலுவலகத்தில் ரெய்டு.. துண்டு சீட்டில் இருந்த ரகசியம்.. சிக்கியது என்னென்ன?
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் அலுவலகத்துல் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சில துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த துண்டு சீட்டுல் இருந்தது என்ன? என்பதை அதிகாரிகள் சொல்லாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை ஆதரித்து திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஆவுடையப்பன் அலுவலகத்துல பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை அதிகாரிகள் நடத்தப்பட்டுள்ளது. வருமானவரித்துறை உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில 5 பேர் கொண்ட குழு இந்த சோதனையை நடத்தினர்.
சோதனையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முகவர்கள், வட்டச் செயலாளர்கள் என அனைவருக்கும் பணம் கொடுத்ததுக்கான துண்டுச் சீட்டை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சோதனை முடிவடைந்து வெளியே வந்த அதிகாரிகள் அதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் சென்றனர்.
சோதனை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், 2 மணி நேரத்துக்கும் மேலாக பிரசாரம் செய்ய விடாமல் தன்னை தடுத்து வைத்தார்கள் என்றும், தன்னோட அலுவலகத்துல் இருந்து பணம் எதும் பறிமுதல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் முக்கிய ஆவணங்களும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஆவுடையப்பனின் அலுவலகத்தில வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பதால், திமுகவினர் மத்தியில் கலக்கமடைந்துள்ளனர்.
வருமான வரித்துறை சோதனை, திமுக, நெல்லை, பாளையங்கோட்டை, பணப்பட்டுவாடா புகார், ஆவுடையப்பன், முன்னாள் சபாநாயகர்
What's Your Reaction?