ரஷ்யா அதிபர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்

 4 ஆண்டுகள் இடைவெளிக்கு ரஷ்யா அதிபர் புடின் பிறகு டிச 4 மற்றும் 5 ஆகிய இரு தினங்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

ரஷ்யா அதிபர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்
Russian President Putin arrives in India

இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் டில்லி வருவதாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;

ரஷ்ய அதிபர் புடினின் அரசு முறைப் பயணம், இந்தியா மற்றும் ரஷ்யாவின் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும், வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை உறுதிப்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து பரஸ்பரம் கருத்துகளை பரிமாறி கொள்ள வாய்ப்பை வழங்கும்.இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் புதின் இந்தியா வருகிறார்.இந்திய பயணத்தின்போது ரஷிய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடைசியாக பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.

2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் தற்போது தான் அதிபர் புடின் இந்தியா வருகிறார். மேலும், இந்த பயணத்தின் போது உச்சி மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. கடைசியாக 2021ம் ஆண்டு இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow