மைசூர் மன்னருக்கு சொந்த வீடு கூட இல்லையாம்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மைசூர் மன்னருக்கு பல கோடி சொத்து இருந்தாலும் சொந்த வீடு, விவசாய நிலம், கார் இல்லை என்பது தெரியவந்துள்ளது. கர்நாடாகாவில் உள்ள மைசூரு-குடகு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தனது வேட்பு மனுவில் மொத்த சொத்து மதிப்பு ரூ.4.99 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

Apr 2, 2024 - 11:03
மைசூர் மன்னருக்கு சொந்த வீடு கூட இல்லையாம்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை அனல் பறக்கிறது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடாகாவில் உள்ள மைசூரு-குடகு தொகுதியில் பாஜக சார்பில் மன்னர் யதுவீர் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ள பிராமணப் பத்திரத்தில் தனது பெயரில் உள்ள 2 வங்கி கணக்குகளில் ரூ.23 லட்சத்து 55 ஆயிரம் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார். மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான பங்குகள், நிறுவனங்களின் பத்திரங்கள் இருப்பதாக மன்னர் யதுவீர் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் 4 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த வீடு, விவசாய நிலம், கார் இல்லை என்று கூறியுள்ளார் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார். மைசூர் பாரம்பரியத்தின் 27 வது மன்னரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் மன்னராக இருந்தாலும் தனக்கு சொந்தமாக வீடு, விவசாய நிலம், கார், வணிக கட்டிடங்கள் இல்லை என்பது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி திரிஷிகா குமாரி பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன.

இந்த தேர்தல் மூலம் மைசூரு மன்னர் பரம்பரையை சேர்ந்தவரை வேட்பாளராக பாஜக களம் இறக்கி உள்ளது. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் வருகையினால் மைசூரு மன்னர் பரம்பரையின் அரசியல் பிரவேசம் மீண்டும் தொடங்கி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow