புற்றுநோய்க்கு விரைவில் முற்றுப்புள்ளி..! குட் நியூஸ் கொடுத்த ரஷ்ய அதிபர் புதின்! என்ன தெரியுமா?

Feb 15, 2024 - 16:56
Feb 15, 2024 - 17:25
புற்றுநோய்க்கு விரைவில் முற்றுப்புள்ளி..! குட் நியூஸ் கொடுத்த ரஷ்ய அதிபர் புதின்! என்ன தெரியுமா?

உலகையே அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கான தடுப்பூசி தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.  ஒருவேளை இது சாத்தியமாகும் போது மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

உலகளவில் பெரும் அச்சுறுத்தலில் இருந்து வரும் நோய்களில் ஒன்றாக இருப்பது புற்றுநோயாகும். இதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டறிவதில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடந்த வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்த மாநாட்டில் பேசிய அவர், நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கான தடுப்பூசியை கண்டறியும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 

ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் தடுப்பூசிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைக்க உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். கடந்தாண்டு இங்கிலாந்து அரசு, ஜெர்மனி நாட்டை அடிப்படையாக கொண்ட பயோஎன்டெக் நிறுவனத்துடன் கேன்சர் மருத்துவ ஆராய்ச்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow