சுட்டெரிக்கும் வெயில்.. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்.. சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அட்வைஸ்

கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் காலை 11:00 மணி முதல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியுள்ளார். குமுதம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டி.

May 2, 2024 - 11:50
சுட்டெரிக்கும் வெயில்.. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்.. சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அட்வைஸ்

நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. தமிழ்நாட்டில் பலரும் வெப்ப மயக்கத்திற்கு ஆளாகின்றனர். வயதானவர்களும், முதியவர்களும் வெயிலில் வெளியே அலைய வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

கோடை வெயிலின் தாக்கத்தினால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியுள்ளார். குமுதம் தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். 

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். வெயிலின் பாதிப்பு கண்டிப்பாக கூடுதலாகதான் இருக்கும், அதற்கு உண்டான முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுமக்கள் எடுத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நம்மளால் இதிலிருந்து மீண்டு வர முடியும் 

முடிந்தவரை வெயில் நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும் இல்லையென்றால் காலை நேரத்திலேயே அனைத்து வேலைகளையும் முடித்து விட வேண்டும் என்று செல்வ விநாயகம் கூறியுள்ளார் 

11:00 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கலாம், அப்படி வர வேண்டுமென்றால் அனைவரும் அவசியமாக தண்ணீர் பாட்டில், தலைக்கு தொப்பி அல்லது குடை எடுத்து வர வேண்டும். தினசரி பொதுமக்கள் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் தாகம் இல்லையென்றாலும் தண்ணீரை அருந்த வேண்டும். இந்த காலகட்டத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய பழங்கள், மோர் உள்ளிட்டவைகளை அனைவரும் சாப்பிட  வேண்டும் என்றும் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். 

வெயிலின் தாக்கத்தினால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதில் பெரியவர்களுக்கு  பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் முடிந்தவரை அனைவரும் வீட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும். வெயிலின் அதிகபட்ச தாக்கத்தினால்  உடலில் உள்ள நீர் சத்தை குறைத்து விடும், அதனால் உடம்பில் உள்ள உப்பு சத்தும் குறைந்துவிடும் அப்போது தலைவலி வாந்தி மயக்கம் உள்ளிட்டவை வர கூடும்  

எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அதேபோல் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.  தயவுசெய்து குழந்தைகளை வெயில் நேரங்களில் வெளியே விளையாட விட வேண்டாம் மாலை நேரங்களில் விளையாட அனுமதியுங்கள் என்றும் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow