பத்திரிகையாளருக்கு மரண பயத்தை காட்டிய இஸ்ரேல்.. சர்வதேச அழுத்தத்தால் விடுவித்தது எப்படி?

காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் சோதனையின்போது அல்ஜாசீரா சர்வதேச ஊடகத்தின் பத்திரிகையாளரை கைது செய்து 12 மணி நேரம் கட்டிவைத்து தாக்குதல் நடத்தி துன்புறுத்திய இஸ்ரேல் படை, ஐநா - உலக நாடுகள் அழுத்தத்தால் அவரை விடுவித்தது.

Mar 19, 2024 - 07:02
பத்திரிகையாளருக்கு மரண பயத்தை காட்டிய இஸ்ரேல்.. சர்வதேச அழுத்தத்தால் விடுவித்தது எப்படி?

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 1,100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட, 31,726 பேர் பலியாகினர். கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட, அக்டோபர் 7ம் தேதி முதல் காசாவில் அதிகக் குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. காசாவில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், நோயாளிகள் குவிந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேலியப் படை ரோந்து மேற்கொண்டு அல்ஜாசீராவின் பத்திரிகையாளர் இஸ்மாயில் அல்-கவுலை கைது செய்தனர். தொடர்ந்து அவரை 12 மணி நேரம் கைகள், கண்களை கட்டிவைத்து அடித்துத் துன்புறுத்தி, காதுக்கு அருகிலேயே துப்பாக்கி சத்தங்களை கேட்க விட்டு இஸ்மாயிலை சித்ரவதை செய்ததாக அல்ஜாசீரா குற்றம்சாட்டியது.

இதைத்தொடர்ந்து, ஊடகவியாளர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதை எதிர்ப்பதாக ஐ.நாவும், அல்ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலை மறைக்க பத்திரிகையாளர்களை தாக்கி இஸ்ரேல் திசைதிருப்புவதாக CPJ-ம் அறிவித்தன. இதையடுத்து பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 12 மணி நேரத்துக்குப்பின் காயங்களுடன் இஸ்மாயில் அல்-கவுல் விடுவிக்கப்பட்டார். அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து 126 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow