"SAY TO NO DRUGS & DMK" - சமூகவலைதள பக்கத்தில் பெயருடன் இணைத்த இபிஎஸ்...
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதள பக்கங்களின் முகப்பில், தனது பெயருடன் "SAY TO NO DRUGS & DMK" என்ற வாசகத்தையும் இணைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் கைலாஷ் பார்க் என்ற பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கும் போதைப் பொருள் கடத்தலில் அதிகளவு தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து போதைப் பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிக கைது செய்துள்ளனர். இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கங்களில், தனது பெயருக்கு பின், "SAY TO NO DRUGS & DMK" என்ற வாசகத்தையும் இணைத்துள்ளார்.
What's Your Reaction?