SJ Suryah: மரண மாஸ் காம்போ… ஃபஹத் பாசில் கூட்டணியில் மல்லுவுட்டில் என்ட்ரியாகும் SJ சூர்யா..?

கோலிவுட்டில் வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா, முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Apr 6, 2024 - 12:19
SJ Suryah: மரண மாஸ் காம்போ… ஃபஹத் பாசில் கூட்டணியில் மல்லுவுட்டில் என்ட்ரியாகும் SJ சூர்யா..?

சென்னை: இயக்குநராக அறிமுகமாகி ஹீரோ அவதாரம் எடுத்தவர் எஸ் ஜே சூர்யா. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி, எஸ்ஜே சூர்யாவுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் அசுரத்தனமாக நடித்து ரசிகர்களை மிரள வைத்திருந்தார். இதனால் எஸ்ஜே சூர்யாவுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானதோடு, அவரது அடுத்தடுத்த படங்கள் மீதும் எதிர்பார்ப்பு எழுந்தது.  

அதன்படி, எஸ்ஜே சூர்யா நடித்துள்ள ராயன், இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களுக்கும் ஹைப் காணப்படுகிறது. இந்நிலையில், டோலிவுட்டை தொடர்ந்து மல்லுவுட்டிலும் அறிமுகமாகவுள்ளாராம் எஸ்ஜே சூர்யா. மலையாளத்தில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ஃபஹத் பாசில். அவரது நடிப்புக்கு கோலிவுட், டோலிவுட் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அடுத்த வாரம் அவரது ஆவேசம் படம் ரிலீஸாக உள்ள நிலையில், விரைவில் மலையாள இயக்குநர் விபின் தாஸ் உடன் இணைகிறார்.  

இந்தப் படத்தில் ஃபஹத் பாசிலுடன் எஸ்ஜே சூர்யாவும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே எஸ்ஜே சூர்யா, ஃபஹத் பாசில் இருவரும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும், அப்படி நடந்தால் அந்த மூவி தரமான சம்பவமாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் விவாதித்து வந்தனர். அதனை உண்மையாக்கும் வகையில் தற்போது எஸ்ஜே சூர்யா, ஃபஹத் பாசில் கூட்டணி இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow