மேம்பாலத்துக்கு அடியில் ஒரே நாற்றம்.. எட்டிப் பார்த்தால் வரிசையில் சடலங்கள்... அதிர்ச்சியான சேலம் மக்கள்

சேலம் மாவட்டத்தில் மேம்பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத 3 சடலங்களை மீட்டுள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

May 3, 2024 - 19:45
மேம்பாலத்துக்கு அடியில் ஒரே நாற்றம்.. எட்டிப் பார்த்தால் வரிசையில் சடலங்கள்... அதிர்ச்சியான சேலம் மக்கள்

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் இருந்து சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் பணிக்கனூர் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு அடியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து ராஜரத்தினம் எட்டிப் பார்த்ததில் அங்கே ஒரு சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து ஜலகண்டபுரம் போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார். 

ராஜரத்தினம் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது சுமார் 50 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. அத்துடன் இருசக்கர வாகனம் ஒன்றும், அருகில் ரத்தம் உறைந்தநிலையில் மதுபாட்டில் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய ஜலகண்டபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow