இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த மண்டை ஒடு, எலும்பு கூடு, விபூதி: போலீஸ் தீவிர விசாரணை 

தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு பார்சலில் மண்டை ஓடு, எலும்பு கூடு, மற்றும் விபூதி வந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த பார்சல் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த மண்டை ஒடு, எலும்பு கூடு, விபூதி: போலீஸ் தீவிர விசாரணை 
இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த மண்டை ஒடு

சென்னை வியாசர்பாடி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ருதி (29). இவர் சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் உள்ள தனியார் டூல்ஸ் விற்பனை செய்யும் கடையில் கடந்த 14 ஆண்டுகளாக அக்கவுண்ட்டாக வேலை பார்த்து வருகிறார்.. 

இந்நிலையில் நேற்று மாலை ஸ்ருதி வேலை பார்த்து வரும் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு பணியில் இருந்த காவலாளி கிருஷ்ணா லால்(59) என்பவரிடம் ஸ்ருதி பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளதாக கூறி பார்சலை கொடுத்து விட்டு சென்றுள்ளார். 

பின்னர் காவலாளி கிருஷ்ணா லால் கடையில் இருந்த ஸ்ருதியை அழைத்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது என கூறிய போது ஸ்ருதி அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, பார்சல் என்னுடையது இல்லை என தெரிவித்துள்ளார்.. உடனே காவலாளி கிருஷ்ணா கடை உரிமையாளர் ஜித்தேந்தருக்கு தகவல் தெரிவித்து விட்டு அனைவரின் முன்பு பார்சலை பிரித்து பார்த்த போது அதில் பழமையான மனித மண்டை ஓடு ஒன்றும், 3 எலும்பு மற்றும் விபூதி பொட்டலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. 

உடனே காவலாளி கிருஷ்ணா இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் எஸ்பிளனேடு போலீஸார் அங்கு விரைந்து சென்று மண்டை ஓடு எலும்பு துண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. 

முதற்கட்ட விசாரணையில் ஸ்ருதியின் கணவர் தினேஷ் குமார் மெடிக்கல் சர்ஜிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.. மேலும் பார்சலை கொடுத்து சென்ற நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow