மாமுல் தரமறுத்த காண்ட்ராக்டர்... ஆத்திரத்தில் வெட்டிய கஞ்சா போதை ஆசாமிகள்..

Feb 19, 2024 - 17:51
Feb 19, 2024 - 17:57
மாமுல் தரமறுத்த காண்ட்ராக்டர்... ஆத்திரத்தில் வெட்டிய கஞ்சா போதை ஆசாமிகள்..

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் அருகே மாமுல் தராத ஆத்திரத்தில் காண்ட்ராக்டரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (44). காண்ட்ராக்டரான இவர், அரசின் கட்டுமானப்பணிகளை ஒப்பந்தம் மூலம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஆவடிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சிமெண்ட் சாலை போடும் பணிகளை காண்ட்ராக்ட் எடுத்துள்ள இவர், அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பிரதான  சாலையில் தடுப்புகள் அமைத்து, ஊழியர்களுடன் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கஞ்சா போதை ஆசாமிகள் 2 பேர், எங்க ஏரியாவில் ரோடு போடுகிறீர்கள், அதற்கு மாமுல் தர வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளனர். 

இதனால் ஒப்பந்தாரருக்கும் கஞ்சா போதை ஆசாமிகளுக்கும் இடையே வாக்குவாதமானது ஏற்பட்டது. அப்போது கஞ்சா போதை ஆசாமி அவனது கூட்டாளிகளை வரவழைத்து, கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். 32 வெட்டு காயங்களுடன் இப்ராஹிம் ஆபத்தான முறையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டு கஞ்சா ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமுல்லைவாயில் போலீஸாருக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow