தங்கம் விலை கடும் சரிவு.. இல்லத்தரசிகள் ஹேப்பி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் சரிவைக் கண்டு சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்குப் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நேற்று (ஜூன் 30) ஒரே நாளில் தங்கம் விலை பெரும் தத்தளிப்பைச் சந்தித்தது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.2,160 வரை அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை, அன்றைய தினமே பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,360 என அதிரடியாக உயர்ந்தது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், இன்று வாரத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,100 என்ற விலைக்கு வந்துள்ளது.
தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், இன்றைய வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.2,45,000 லட்சம் ஆகவும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
What's Your Reaction?